Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 மே 03 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (3) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.
இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
3 வருடங்களுக்கு பின்னர் மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் கொரோனா அச்சுறுத்தல் உட்பட இதர காரணங்களினால் பெருநாள் தொழுகை கட்டுப்பாடுகளுடன் நாடுபூராகவும் இடம்பெற்றிருந்தன.
இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித நோன்புப் பெருநாள் பண்டிகையை 3 வருடங்களின் பின்னர் சிறப்பாக அனுஷ்டிக்கின்றனர் .
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு உணவுப் பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago