2024 டிசெம்பர் 12, வியாழக்கிழமை

203 வது கொடியேற்ற விழா

Mayu   / 2024 டிசெம்பர் 03 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல்  ஹுதா உமர்

ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகத்தின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 வது கொடியேற்று விழா  திங்கட்கிழமை (02)  ஆரம்பமானது.



கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிர்வாகிகள், ஊர் மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.


இன்று கொடி ஏற்றிய தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித ரிபாஈ ராதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு, கொடியிறக்கு தினம் டிசம்பர் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது.



இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .