Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
தழிழர்களுக்கான தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தற்காலிகமாவேனும் அமுல்படுத்தவதற்கு தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வரவேற்கத்தக்கது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
இதை வலுவுள்ளதாக மாற்றுவதற்கு விடா முயற்சியுடன் செயற்படுமாறும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“1989ஆம் ஆண்டு இருந்து இன்று வரையும் முப்பத்தி மூன்று வருடங்களாக மாகாண முறை நிர்வாகம் அமுலில் உள்ளது. இது பாராளுமன்றத் சட்டத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட ஓர் அரசியல் அதிகாரமாகும். இது இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
“13ஆவது திருத்தச்சட்ட அரசியல் அதிகாரத்திலுள்ள சில அதிகாரங்கள் மாகாண முறைமைக்குக் கீழ் கொண்டு வரப்படவில்லை. பல விடயங்கள் மத்திக்கும், மாகாணத்துக்கும் பொதுவாக உள்ளன. சில விடயங்கள் மட்டுமே மாகாணத்துக்கென தனியாக உள்ளன.
“13 ஐப் பொறுத்தவரையில் சிறுபான்மை இனத்துக்காக வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு மாகாண சபையாக இயங்கி வந்த நிலையில் பல அதிகாரங்கள் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டன. காலப்போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு இணைத்த முறைமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாண சபை நிருவாகம் கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது.
“இதேவேளை, சிறுபான்மை இனத்துக்கு உள்ள அதிகாரத்தை அரசு இல்லாமலாக்குவதோடு, புதிய அதிகாரங்களைத் தர மறுக்கின்ற செயல் வடிவத்தை இல்லாமலாக்குவதற்கும், சர்வதேச அங்கிகாரத்தை பெற்றுக் கொண்டு சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தமிழ்த் தலைமைகள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
“அதிகாரப் பரவலாக்கலையும், அபிவிருத்தியையும் சமூகம் ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ்த் தலைமைகள் இவ்விடயத்தில் உள்ளடக்கப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பாக கூடி முடிவெடுக்கப்பட்டது தமிழர்களின் மத்தியில் நல்லதொரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago