Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புலனற்றோர்களது உரிமைகளை எடுத்துரைக்கும் வகையில், மட்டக்களப்பில் இன்று (25) விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்டச் செயலாளர் க.கருணாகரன் கலந்துகொண்டார்.
நிகழ்வின் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கரிகரராஜ், மட்டு லயன்ஸ் கழக வலய முதல்வர் கே.லோகேந்திரன், கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரும், சமூக ஆர்வலருமான திருமதி திலகவதி ஹரிதாஸ் உட்பட தரிசனம் விழிப்புணர்வு நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மற்றுமு் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த வருடம் இவ்விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. அதேவேளை, நேற்றைய நிகழ்வு எளிமையான முறையில், விழிப்புணர்வு தரிசனம் பாடசாலைக்கு அருகில் விழிப்புணர்வு ஊர்வலமாக நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago