2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வீரர், வீராங்கனைகள் கௌரவிப்பு

Editorial   / 2021 நவம்பர் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர், வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையில் நேற்று (23) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் வீரர் மற்றும் வீராங்கனைகளே, இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் பிரதான போதனாசிரியர் பொறியியலாளர் சிகான் முருகேந்திரன் வழிகாட்டலில், போதனாசிரியர் எச்.ஆர்.சில்வாவின் பயிற்றுவிப்பு ஊடாக ஆர்.துஸ்யந்தன் என்னும் வீரரும் வி.விதுஜா என்னும் வீராங்கனையும் தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண்னொருவர், தேசிய கராத்தே அணிக்கு மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 21 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் முதன் முறையாக மட்டக்களப்பிலிருந்து ஆண் ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் போதனாசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .