Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட மண் வளம் சூறையாடப்படுவதைக் கண்டித்து, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் விவசாயிகள், இன்று (08) வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.
மண் அகழ்வு காரணமாக விவசாயப் போக்குவரத்துக்கான வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மண்ணைச் சுரண்டுவதா கிழக்கை மீட்கும் பணி எனவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி ஆகியோர் உடனடியாக இதை தடுத்து நிறுத்துமாறும் விவசாயிகள் கோஷமிட்டனர்.
இதன்போது, ஆத்திரமுற்ற போராட்டக்காரர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த கனரக வாகனங்களை திருப்பி அனுப்பியதுடன், மண்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களை மறித்து அனைத்து மண்ணையும் ஏற்றிய இடத்தில் பறிக்கச் செய்துள்ளனர் .
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மண்ணுரிமை உரிமையாளர், வீதி சேதமடைந்தமை வேதனைக்குரிய விடயம் எனவும் அவ்வீதியை தனது செலவில் செப்பனிட்டுக் தருவதாகவும் இன்றைய நாளில் இருந்து மண்ணை வெளி மாவட்டத்துக்கு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்படாது என உறுதியளித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
மண்களை ஏற்றிய கனரக வாகனங்கள் அனைத்து மண்ணை பறித்துவிட்டு வெறும் கனரக வாகனங்களாக வெளி மாவட்டங்களுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago