2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வீடு முற்றாக தீக்கிரை; அயலவர் இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூர் பிரதேசத்தில் பூட்டியிருந்த வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம்  தொடர்பில், அவ் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் உரிமையாளரும் அவரின் மகனும் சந்தேகத்தின் பேரில் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்துக்கு அருகிலுள்ள இரு பிள்ளைகள் உட்பட 4 பேர் கொண்ட வீட்டின் உரிமையாளர், தகரத்தால் கட்டப்பட்ட தனது வீட்டை பூட்டிவிட்டு, சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (06) இரவு உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் தங்குவதற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததையடுத்து, அயலில் உள்ளவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருந்தபோதும் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது .

இதனையடுத்து, வீடு தீப்பற்றிய சம்பவம் தொடர்பில்  அவ் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் உரிமையாளரான 50 வயதுடைய நபரும் அவரின் 18 வயதுடைய மகனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X