Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 10 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, சந்திவெளியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளனர் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற ஓட்டோவுடன் எதிரே வந்த கென்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய இருவரும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
53 minute ago
1 hours ago