2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விக்டர் சுஜித்குமாரின் சடலம் மீட்பு

Freelancer   / 2021 ஜூலை 10 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று (10) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக பிள்ளைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார்.

இந்த நிலையில், தனிமையில் இருந்த இந்நபர், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .