2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் கொரோனா இன்றும் அதிகரிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 05 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (05) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரிகள், வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் மற்றும் வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இப்பரிசோதனைகள் இடம்பெற்றன.

321 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைககளும் 206 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன. 

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 96 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் 100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும்; கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 100 பேருக்கு  அன்டிஜன் பரிசோதனைகளும் 60 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும்; ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 165 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும்  6 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டன. 

இதில் ஓட்டமாவடியில் அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அன்டிஜன் பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்குமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .