2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் குழு மோதல்: இருவர் காயம்

Editorial   / 2024 மே 12 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே    சனிக்கிழமை (11) மாலை ஏற்பட்ட மோதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியி ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த பகுதியைச் இருவர் சம்பவதினமான சனிக்கிழமை (11) முச்சக்கர வண்டியில் பயணித்தனர் இதன் போது அங்கு  மோட்டர் சைக்கிளில் பயணித்த 23 வயது இளைஞன் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இளைஞன் மீது தாக்குதலையடுத்து இளைஞன் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான்.

இதனையடுத்து அந்த இளைஞனை வெளியேவருமாறு முச்சக்கரவண்டியில் சென்ற இருவரும் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.   

ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இளைஞனுக்கும் அந்த இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து இளைஞனின் தாக்குதலில் அந்த இருவரும் படுகாயமடைந்தனர்.  அங்கிருந்து இளைஞன் தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். .

இதில் படுகாயமடைந்த 47, 45 வயதுடைய இருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் இன முறுகல் ஏற்படும் நிலை ஏற்பதை தடுப்பதற்காக உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X