2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் கிளைமோர் குண்டு மீட்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, முல்லை வீதி, கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் குண்டு ஒன்று, இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸார், சித்தாண்டி இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இந்தக் கிளைமோர் குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

கிளைமோர் குண்டு மீட்கப்பட்ட இடத்துக்கு அருகாமையில் தற்போது கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அருகிலுள்ள வெற்றுக் காணியில் யுத்த காலத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்துக்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி கிளைமோர் குண்டு அந்த இடத்தில் யாரால் மறைத்து வைக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .