Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Janu / 2025 மார்ச் 16 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்து, ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பேருந்து கல்லடிப்பால சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்,ரீ.எல்.ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .