2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

லொறியில் உரம் கடத்தல்; இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அத்தியாவசிய சேவை என்ற பேரில், அரசு மானியமாக வழங்கிய உரத்தை சட்டவிரோதமாக லொறியில் கடத்திச் சென்ற இருவர், மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வைத்து நேற்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

குருநாகலில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த இந்த லொறியில் இருந்து 53 உரப் பக்கெட்டுகள் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, தாழங்குடா பகுதியில் இராணுவத்தினர்  வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்த லொறியை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, உரத்தை சட்டவிரோதமாக கடத்துவதைக் கண்டறிந்து, லொறியின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரையும் இராணுவத்தினர் கைது செய்ததுடன், அதிலிருந்த உரத்தை மீட்டனர்.

கைதுசெய்தவர்களையும் மீட்கப்பட்ட உரம் மற்றும் லொறி என்பவற்றை  காத்தான்குடி பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினமே சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .