Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். ஜெயஸ்ரீராம்
கடந்த 10 வருடத்துக்கு மேலாக ரூபாய் 250 இற்கு சேவையாற்றும் எங்களுக்கு, இனியும் காலம் தாழ்த்தாது ரயில்வே திணைக்களத்தில் நிரந்தர நியமனம் தருமாறு கோரி, ரயில்வே கடவை ஊழியர்கள் நேற்று (06) வாழைச்சேனை ரயில் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை ரயில் நிலையத்தில் ஒன்று கூடியவர்கள், தங்களது கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, வாழைச்சேனை - கொழும்பு வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக, ‘அரசே நிரந்தர நியமனத்தை தா’; ‘சம்பளத்தை அதிகரித்துத் தா’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர், இதற்கான தீர்வை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர்,டு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்து பெற்றத்தருவதாகத் தெரிவித்தார்.
மேற்படி ரயில்வே கடவை ஊழியர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான 26 ரயில்வே கடவையில் 78 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலம் பணியாற்றி மாதாந்த சம்பளமாக ரூபாய் 7,500 பொலிஸ் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய விலைவாசிகளின் அடிப்படையில், இந்தச் சம்பளத்தைக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளமுடியாது என்று கவலையுடன் கூறுகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
2 hours ago
3 hours ago