2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ரயிலில் மோதி பெண் பலி

Editorial   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ​ரயிலில் மோதி பெண்ணொருவர் மரணித்துள்ளார் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சந்திவெளி பகுதியில் வைத்து நேற்றிரவு (20) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்துள்ள பெண் தொடர்பான விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், அவர் 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பெண்ணின் உடல், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா எனும் கோணத்தில் சந்திவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .