Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 16 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான், கனகராசா சரவணன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் இன்று (16) யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கொண்டயன்கேணியில் இருந்து இன்று அதிகாலை இருவர் காயான்கேணி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.
இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர் தப்பியோடியுள்ளார். அவர்கள் பயணித்த சைக்கிளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை, கொண்டயன்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.தஸீஸ்கரன் (வயது 25) என்பவரே யானையால் தாக்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் இப்பிரதேசத்தில் யானை வேலி அமைக்காவிட்டாலும் வீதி மின் விளக்குகளைப் பொருத்தியாவது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, வாழைச்சேனை பிரதேச சபையிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago