2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மோகனுக்கு 31 வரை விளக்கமறியல்

Editorial   / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 31ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர்,  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி, இன்று (17)வெள்ளிக்கிழமை காணொளி மூலம்  உத்தரவிட்டார்.
 

தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையத்தளங்களில்  பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3 ஆம் திகதி   அவரது வீட்டில்வைத்து ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  கொரோனா காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரமுடியத காரணத்தினால் காணொளி மூலம் அவரை தொடர்ந்து எதிர்வரும் 31 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .