2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மெழுகுவர்த்தியால் எரிந்து நாசமாகிய பொருட்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மின்சாரம் தடைப்பட்ட வேளை மெழுகுவர்த்தி ஏற்றிய போது அதன் தீ வீட்டுப் பொருட்களில் பட்டு பொருட்கள் எரிந்துள்ள சம்பவமொன்று மீராவோடை ஹாஜியார் வீதியில் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. 

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஹாஜியார் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தமது வீட்டு அறையொன்றில் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு வேறு அறையில் தாம் இருந்த போது மெழுகுவர்த்தி விழுந்து தீப்பற்றியதில் வீட்டுப் பொருட்கள் எரிந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததினால் பெரும் ஆபத்திலிருந்து தப்பிக் கொண்டதாக வீட்டு உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .