Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 31 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடியை சேர்ந்த பாடசாலை மாணவனை கடந்த மூன்று நாள்களாக காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடி - 01, பழைய மக்கள் வங்கி வீதியில் வசிக்கும் மன்சூர் அன்ஸப் (வயது - 17) என்ற மாணவனே கடந்த வெள்ளிக்கிழமை (28) மாலை 03 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி காணாமற்போயுள்ளார்.
அவரது சைக்கிள், மேற்சட்டை மற்றும் பாதணி என்பன பாசிக்குடா யானைக்கல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (29) கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் காணாமல் போன மாணவன் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, மாணவனின் கையடக்கத் தொலைபேசியைத் தொடர்புகொள்ளும் போது, அது பாவனையில் உள்ளதாகவும் ஆனால், மருமுனையில் இருந்து எந்தப் பதிலும் இல்லை என்றும் மாணவனின் தந்தை தெரிவித்தார்.
இவ் மாணவன் தொடர்பான தகல்கள் ஏதும் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அவரது தந்தையின் தொலைபேசி 0773587875 இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
காணாமல் மாணவன், ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்று வருபவர் என்பதுடன், 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதார தரப் பரீட்சையில் 09 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago