Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஜூன் 07 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள், 32 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (06) விடுவிக்கப்பட்டு, கையளிக்கப்பட்டன.
தனியாருக்கு சொந்தமான 8.6 ஏக்கர் காணியே கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராட்சிளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களை இனங்கண்டு உரியவர்களிடம் காணிகளை ஒப்படைக்கும் நடவடிக்கைக்காக, மாவட்ட அரசாங்க அதிபரால் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 59 தனிநபர்களுக்கு சொந்தமான காணிகளே, இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
27 minute ago
38 minute ago