2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

முன்னாள் எம்.பி பயணித்த கார் விபத்து

Janu   / 2024 ஜூன் 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பிரயானித்த  வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதி பாரிய விபத்துக்குள்ளாகிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை  இடம்பெற்றுள்ளது.

‌குறித்த கார் பொத்துவிலில் இருந்து வந்து கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது .

இதன் போது காரில் பயணித்த, வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மின்கம்பத்தில் மோதியதால் குறித்த பிரதேசத்தில் இரண்டு மணிநேர மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .