2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்

Princiya Dixci   / 2022 ஜூலை 14 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

கடந்த ஒன்றரை மாதத்துக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சமையல் எரிவாயு, இன்று( 14)  விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு,  காத்தான்குடி மற்றும்  கல்லடி போன்ற பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு போத்தல்கள்  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 4,000  சமையல் எரிவாயு போத்தல்கள் கொண்டு வரப்பட்டு, ஒரு குடும்ப அட்டைக்கு ஒன்று வீதம் பிரித்து வழங்கப்பட்டன.

காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய ஸ்ரீதர்  முன்னிலையில் சமையல்  எரிவாயுகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.

இதன்போது பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .