2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாற்றுதிறனாளிகளுக்கு உலர் உணவு பொருட்கள்

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம் அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டுத்தோட்டம் செய்யும் விசேட தேவையுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) சமுக பராமரிப்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் 128 பேர், வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் அனுசரனையில் வீட்டுத் தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, கடலை, தேயிலை, கோதுமை மா, சோயா மீட், சமபோச போன்ற 10,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சமுக சேவை உத்தியோகத்தர் எஸ். ஜெயசேகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன், சமுக சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரேமானந்த சுதர்சினி, வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பதில் பொது செயலாளர் எஸ். பெற்றிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .