Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான 550 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணி, இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு, தாளங்குடாவிலிருந்து இன்று (04) காலை ஆரம்பமானது.
பொத்துவிலிருந்து நேற்றுக் காலை ஆரம்பமான இந்தப் பேரணி, நேற்று மாலை தாளங்குடாவில் இடைநிறுத்தப்பட்டது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை அபகரித்தல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்தக் கண்டனப் பேரணி நடைபெற்று வருகின்றது.
இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், பலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
40 minute ago
3 hours ago