Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில், மதிய உணவைப் பெற்றுவந்த சகல மாணவர்களுக்கும் 1,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. அப்பொதிகளில், பிஸ்கட், நூடில்ஸ், பயறு, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில், கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை, நேற்று முன்தினம் (06) சந்தித்துக் கலந்துரையாடிய போதே, மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதியை ஜனாதிபதி செயலகமே அறிவிக்கும் என்றும் இங்கு கூறப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித பி வணிகசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் எ.எச்.எம்.அன்சார், மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் சமுகமளித்திருந்தனர்.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையிலான குழுவில், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்களான எ.விஜயானந்தமூர்த்தி, திருமதி எஸ்.வரதசீலன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பி.காப்தீபன் (கல்வித் திட்டமிடல்), ஆர்.நிமலரஞ்சன் (கல்வி அபிவிருத்தி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமூக இடைவெளியைப் பேணி வகுப்பை நடத்துவது தொடர்பில் முதலில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பின்பு, கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது, சுத்தப்படுத்தல், கற்றல் - கற்பித்தல்களை எவ்வாறு ஆரம்பித்தல், பரீட்சைகள், ஏனைய கள நிலவரங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பாடசாலைகள் ஆரம்பமாக முன்பு, பாடசாலைகளைச் சுத்தப்படுத்துவதற்கென 8.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினரின் வழிகாட்டலுக்கமைய, இச்செயற்பாட்டை பாடசாலைச் சமூகம் முன்னெடுக்கவேண்டுமெனவும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடே இச்சுத்தப்படுத்தல் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீட்டிலிருந்து கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டுக்கென, கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களிலிருந்தும் 17 பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து, அலைபேசியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கை, இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago