2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

‘மரணங்களுக்கு காரணமாகாதீர்’

Princiya Dixci   / 2021 ஜூன் 08 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

தேவையின்றி வீதிகளில் அலைந்து திரிந்து உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாகாதீர்கள் என, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் கேட்டுள்ளார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இப்பகுதியில் கடந்த 4ஆம் திகதி 52 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“அத்துடன், கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

“ஆகவே, தேவையின்றி வீதிகளில் அலைந்து திரிந்து, வீட்டிலுள்ள முதியோருக்கும் சிறியவர்களுக்கும் கொரோனா தொற்றைக் கொடுத்து, உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாக அமைய வேண்டாம்.

“அரசாங்கம் பிறப்பித்துள்ள சட்டதிட்டங்களை மதித்து, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என்று வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .