2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மணல் வியாபாரத்தில் மாஃபியாவை ஒழித்தல்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மணல் வியாபாரத்தில் நிலவும் மாபியாக்களின் தலையீடு மற்றும் முறைகேடுகளை ஒழித்து, நியாயமான சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் இஷட்.ஏ. நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் வகையில் சுற்றாடல்துறை அமைச்சால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாராந்தம் இவ்வாறான கூட்டங்களை நடத்துவதற்கு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இடம்பெற்ற அதிகாரிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கட்டடப்பணிகளுக்குத் தேவையான மண்ணை முறையாக விநியோகிப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“இதற்கமைய, மணல் அகழ்வுத் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இன்னும் அதற்காக அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முறையற்ற மணல் அகழ்வுகள் சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் அதனைத் தடுப்பதற்குரிய வழிவகைகள் குறித்தும் அமைச்சின் உயரதிகாரிகள் கலந்துரையாடினர்.

“மணல் அகழ்வுகளால், சாதாரண பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இடைத்தரகர்கள் தலையிடுவதால், விலைகள் தேவையற்ற வகையில் உயர்கிறது. சாதாரண வீடொன்றைக் கட்டுவதற்கு கூட, இவர்களால் மணலை பெற முடியாதுள்ளது” என்றார்.

ட்ரெக்டர்கள், லொறிகளில் மணலை ஏற்றுவதை தவிர்த்து, ரயில்பெட்டிகள், ரயில் இழுவைப் பெட்டிகளில் ஏற்றுவதற்கும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .