Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம்.நூர்தீன், அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா
மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக டொக்டர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமையை, குறித்த பிராந்தியத்தில் உத்தியோகபூர்வமாக நேற்று (18) பிற்பகல் பொறுப்பேற்றுள்ளார்.
தேவை நிமித்தம், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவை பதில் பணிப்பாளராக கடமையாற்றுமாறு, கடிதம் ஒன்றின் ஊடாக சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடமாற்றம் பெற்று புதிய கடமையை பொறுப்பேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தனது முன்னைய பதிவிக் காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு உச்சக்கட்டத்தில் தனக்கு கிடைக்கப்பெற்றதாகவும் இதனால் மக்கள் உடனடியான தகவல்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்த அவர் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனை பிராந்திய சேவைகள் பணிமனையின் பதில் கடமைக்காக, கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித், சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசல குணவர்தனவினால் தற்போது நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago