Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 19 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
“காலாகாலமான பிரச்சினையாக இருந்து வருகின்ற அம்பாறை- மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினை இனியும் தொடரக்கூடாது. இரு மாவட்டச் செயலாளர்களின் கலந்துரையாடலோடு, ஜனாதிபதியின் இணக்கப்பாட்டோடு, இது தீர்த்து வைக்கப்படும்”.
இவ்வாறு கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஐந்து வருடங்களுக்கு பிற்பாடு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எஸ் எம் எம்.முஸரப் தலைமையில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.லியாக்கத்தலியின் வழிகாட்டலில், பிரதேச செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல சமூக சேவையாளருமான சந்திரசேகரன் ராஜன், மட்டு. - அம்பாறை எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோது, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கு உறுப்பினர் ராஜன் உரையாற்றுகையில்...
“அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லை, மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லை என்பன இதுவரை காலமும் தீர்க்கப்படாமல் இரண்டு மாவட்டத்துக்கு இடையில், ஏன் ஒரே சமூகத்துக்கிடையில் முரண்பாடுகளை, பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
“கல்முனை மாநகர சபையினுடைய எல்லை வை ஜங்ஷன். கார்ட் வீதி என சொல்லப்படுகின்றது. இருந்த போதும் களுதாவளை பிரதேச சபையினுடைய எல்லை எது என்பது தெளிவாக சொல்லப்படாததன் காரணமாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த பெரிய நீலாவணை, பெரிய கல்லாறு மக்களுக்கிடையே பல காலமாக முரண்பாட்டுத் தன்மையும் பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
“இந்தப் பிரச்சினைக்கான சுமூகமான தீர்வை பெற்றுத் தந்து, இரு மக்களையும் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி வகுத்து தருமாறு வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
6 hours ago
8 hours ago