Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களான கோவிலில் இரும்பு கம்பி திருடியமை, சைக்கிள் திருடியமை, மாமனாரை கோடரியால் கொத்தியமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று புதன்கிழமை (05) இரவு கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊறணி, கொத்துக்குளம் மாரியம்மன் ஆலையத்துக்குள் உள்நுழைந்த திருடன், அங்கு கோபுர கட்டட புனரமைப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு இருந்தபோது, காவலாளி பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, திருடன் கையும்மெய்யுமாக பிடிபட்டான்.
நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன் 10 இரும்பு கம்பிகளையும் மீட்டனர்.
அதேவேளை, சீலாமுனை பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூளாவடி பிரதேசத்தைச் சோந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு சைக்கிள்களும் மீட்கப்பட்டன.
இதேவேளை, புதூர் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (04) மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காரியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுடைய மாமனாரை, கோடாரியால் கொத்தி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி வந்த 44 வயதுடைய மருமகனை கைது செய்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
34 minute ago
42 minute ago
44 minute ago