2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் தொற்று தீவிரம்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித் , எம்.எஸ்.எம்.நூர'தீன்

மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு, சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் இன்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 257 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இருவர் மரணமடைந்துள்ளனர்.

“தொற்றுக்குள்ளானவர்கள், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேரும், பட்டிப்பளை, வவுணதீவு, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 10 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும் அடங்குகின்றனர்.

“அத்துடன்,  கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், வாழைச்சேனை, வாகரை, கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து தலா ஒருவரும் அடையாளம் காணபப்பட்டுள்ளனர்.

“மரணமடைந்தவர்களில் ஒருவர், காத்தான்குடியைச் சேர்ந்தவர். மற்றையவர் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர் ஆவார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 223 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களில் 20 வயதுக்குட்பட்ட எவரும் மரணிக்கவில்லை. 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட 09 பேரும், 40 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட 66 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 147 பேரும் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 53 சதவீதமானவர்கள் ஆண்களேயாவர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .