Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 10 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக, நேற்று (9) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் மற்றும் நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களால், குறித்த சிகிச்சைப் பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இங்கு நூறு கட்டில்கள் அமைக்கப்பட்டு நூறு நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாக இந்த சிகிச்சைப்பிரிவு அமைந்துள்ளது.
இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் திறக்கப்பட்ட கொவிட் சிகிச்சை நிலையங்களில் 667 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் 667 கட்டில்கள் இடப்பட்டுள்ளது.
என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் இதன்போது தெரிவித்தார்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago