2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புத் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துக்குள் 71 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், மட்டக்களப்பு 20 நோயாளர்களும் வாழைச்சேனை 12 நோயாளர்களும் காத்தான்குடி12 நோயாளர்களும் ஏறாவூர்  07 பேரும் செங்கலடி 6 நோயாளர்களும் ஓட்டமாவடி சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில்  06 நோயாளர்களும் களுவாஞ்சிக்குடி பிரிவுகளில் 3 பேர் டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதுபோன்று கோறளைப்பற்று மத்தி பிரிவில் 2 நோயாளர்களும், கிரான் 2 நோயாளர்களும், வவுனதீவு 1 நோயாளர்களும் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் டெங்கு நோயால் உயிரிழப்புகள் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

மொத்தமாக கடந்த வாரம் 20 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன், நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X