2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

போதைப்​பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Freelancer   / 2023 ஜூன் 13 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 80 கிராம் ஹரோயின் போதைப் பொருள், கஞ்சா மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேர் உட்பட 6 பேரை திங்கட்கிழமை (12) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திங்கட்கிழமை (12) 80 கிராம் ஹரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்  3 பேரை கைது செய்தனர். அதேவேளை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை 450 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்

இதனை தொடர்ந்து 12 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பை மீட்டதுடன் இவ்வாறு ​​​வெவ்வேறு சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .