2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருட்களுடன் பெண்கள் இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சல வீதியைச் சேர்ந்த 36, 45 வயதுகளுடைய பெண்கள் இருவர், போதைப்பொருட்களுடன் நேற்று (04) கைதாகியுள்ளனர்.

வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து 500 மில்லிகிராம் ஹெரோய்ன், 23 கிராம் 550 மில்லிகிராம் கேரளா கஞ்சா மற்றும் 60 போதைமாத்திரைகளும் மற்றைய பெண்ணிடமிருந்து 17 கிராம் 330 மில்லிகிராம் கேரளா கஞ்சா, 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X