2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை, காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை சலீம் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அவர் விடுத்துள்ள பொது அறிவித்தலில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது, “அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அப்பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

“இன்னும் சில பிரதேசங்களில் தொற்று அபாய நிலை காணப்படுகிறது என்கின்ற சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக, இம்மாதம் 12ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்குரிய போட்டிப் பரீட்சை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X