Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ நபீலின் மருந்து உற்பத்திப் பிரிவால் தயாரிக்கப்பட்ட போசாக்கான பிஸ்கட்டுகள் விஸ்கட்டுக்கள், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் பரிசீலனைக்காக போசாக்கான விஸ்கட்டுக்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம் ஹனிபா, திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்தியர் ஏ.ஆர் நியாஸ், நிர்வாக உத்தியோகத்தர் கே.ஏ ஜப்பார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago