2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி

Princiya Dixci   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் ஹேரத் (வயது 35) எனும் பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் நேற்று (23) மாலை மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறையில் தனது ஊரான குருணாகல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், பிரேதப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X