2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பொலிஸ் - இராணுவ கூட்டு வீதித் தடை அரண்

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு - வாகரை, வெலிக்கந்தை எல்லை ரிதிதென்ன பகுதியில் பொலிஸ் - இராணுவ கூட்டு வீதித் தடை அரண் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அல்கிம்மா நிறுவனம், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கம், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் ஆகியோரின் நிதிப் பங்களிப்பு மூலம் கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்ட பொலிஸ் இராணுவ கூட்டு வீதித் தடை அரண் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வெலிக்கந்தை எல்லை பகுதியில் மக்கள் பாதுகாப்பு கருதியும், மாவட்ட எல்லைப் பாதுகாப்பு கருதியும் வீதித் தடை அரண் அமைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், மக்கள் நலன் கருதி குடி நீர் வசதியும் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 22 இராணுவ கூட்டு வீதித் தடை அரண் அமைக்கப்பட உள்ளதாகவும், இவற்றுக்கான நிதிப் பங்களிப்பு வேலைத் திட்டங்கள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் மூலம் பெறப்பட்டு அரண் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வா தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .