2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரிக்கே KG விற்றவர் சிக்கினார்

Editorial   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண் பாடசாலைக்கு முன்பாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த நபரொருவர்.  பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் இன்று(27) காலை கைது செய்யப்பட்டார்.

 இந்தத் தகவலை, காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் உறுதிப்படுத்தினார்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து கஞ்சா விற்கும் நபரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்ற போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி குறித்த நபரிடம் 'கஞ்சா வேணும்' எனக் கேட்டுள்ளார்.

மறுமுனையில் பதிலளித்தவர், குறித்த பாடசாலைக்கு முன்பாக வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சென்ற போதை ஒழிப்பு  பிரிவு பொறுப்பதிகாரி சியாமுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்டு கேரளா கஞ்சாவை வாங்கிய போதே, விற்றவர் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து சிறிய பக்கட்டுகளைக் கொண்ட கேரளா கஞ்சா பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .