Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 21 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு ஆரையம்பதி பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், பெற்றோலை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்து பொது மக்கள் சிலர்
நேற்றிரவு (20) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பெற்றோலை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை பொது மக்களுக்கு விநியோகிக்குமாறும் கூறினர்.
இதன்போது ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவருடன் கலந்துரையாடல் இடம் பெற்றது. பெற்றோல் இல்லையெனவும், பெற்றோல் முடிந்து விட்டதாகவும் ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கூறினார்.
எனினும் பெற்றோல் பதுக்கி வைத்திருப்பதாகவும், தமக்கு தேவையானோருக்கு ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவு சங்க நிர்வாகம் மறைமுகமாக வழங்குவதாகவும், அதனை ஒளிப்பதிவு செய்து வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், அங்கு வந்த பொலிஸாரும் ,இராணுவத்தினரும் நிலைமையை சுமூகமாக்கினர். எனினும் பெற்றோல் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago