2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பெண்கள் தினத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

Editorial   / 2022 மார்ச் 09 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

பெண்கள் தினத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இலங்கை உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், அக்கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன், இன்று (09) தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 08) பதுளை, ஹாலி எல தமிழ் பாடசாலை மாணவி,  உடுவரை பகுதியில் நடுவீதியில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில், “பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, சம உரிமை இல்லை, சமந்துவம் இல்லை, சுதந்திரம் என இலங்கையில் சர்வதேச மகளிர் தினத்தில் பல பெண்கள் அமைப்புகள் கருத்துகளை வெளியிட்டனர்.

“அதே தினத்தில் 18 வயதான மாணவி, பாடசாலையிலிருந்து அவரது வீட்டுக்கு செல்லும் வீதியில் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள செயலானது இலங்கையில் எந்தவகையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

"நாடும், தேசமும், உலகமும் அவளே" என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதே பெண்கள் தினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால், “பெயரளவில் மட்டும் நாடும் தேசமும் உலகமும் அவளே என்ற கோஷங்களை முன்வைத்தாலும் “நாடும், தேசமும், உலகமும், அவனே” என்ற கருத்தே இலங்கையில் உள்ளதை அனுபவரீதியாக உணரமுடிகிறது.

“உண்மையில் ஒரு பாடசாலை மாணவி சர்வதேச மகளீர் தினத்தில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், குற்றவாளி தண்டிக்கப்படுவதுடன் இவ்வாறான கொடூரங்கள் இனிமேலும் நடக்காமல் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .