2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதான கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கான புதிய  நிருவாகக் கட்டிடத் தொகுதி செவ்வாய்க்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இடவசதிகளின்றி ஓட்டமாவடி நகரில் இயங்கி வந்த  பழைய கட்டிடத்தில் இருந்த பிரதேச செயலக அலுவலகம்  இடம்மாற்றப்பட்டு காகிநகரில் உள்ள விசாலமான இடத்தில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்டுள்ளது.

புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழாவில் சுற்றாடல்துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீரலி உட்பட பிரதேச  செயலாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள். பிரமுகர்கள் பொது மக்கள் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .