Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 05 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் தவராசா சுரேஷ் எனும் உத்தியோகத்தர் புகையற்ற புதிய வகை அடுப்பினை கண்டுபிடித்துள்ளதுடன், குறித்த அடுப்பினை நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் இக்காலகட்டத்தில், எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய புதிய வகை அடுப்பினை மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்களுக்கு அறிமுகபடுத்தியதுடன், இதன் செயல்திறன் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
இந்த புதிய வகை அடுப்பின் பாவனை தற்போதைய கால கட்டத்தில் தேவை கருதி தான் இதனை உருவாக்கியதாக இதன் போது குறித்த உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் கூட இந்த அடுப்பினை பாவனைக்கு உட்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டுள்ள இக் காலகட்டத்தில் புதிய புகையற்ற அடுப்பினை பாவனை செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் கே.தயாபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .