2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’பின்தங்கிய பாடசாலைகளில் அபிவிருத்தி மேற்கொள்வோம்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் கானப்படுகின்ற குறைபாடுகளை அடையாளம் கண்டு, அபிவிருத்தி மேற்கொன்ள வேண்டுமென மடக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு இனைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழுக்கூட்டம், சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி தலைமையில், மாவட்டச் செயலாளர் க.கருணாகரனின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (09) நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் மாவட்டத்தின் கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்தவேண்டும் எனும் தனது உயரிய நோக்கதை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள வலைய கல்வி பணிப்பாளர்கள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவன்டா, கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

பின்தங்கிய பாடசாலைகளில் அபிவிருத்தி மேற்கொள்வதற்கு கல்வி அமச்சரின் உதவிகள் பெறவுள்ளதாகவும் குறிப்பாக மின்சார இணைப்பற்ற பாடசாலைகள், ஓலைகொட்டகை பாடசாலைகள், குடி நீர், மலசல கூடங்கள், போக்குவரத்து, வகுப்பறை தளபாடங்கள் அற்ற பாடசாலைகளை அடையாளம் கண்டு உடணடியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் சி.சந்திரகாந்தன் எம்.பி தெரிவித்தார். 

ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பாக சமப்படுத்தல் இடமாற்றத்தைச் செய்வதும் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களை வழங்கவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .