Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில், சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றும் கெப் ரக வாகனமொன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியருயிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்றுள்ளது .
இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும்
சாரதியின் நித்திரை கண்கலக்கமே இவ் விபத்திற்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதனால் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 மின்கம்பங்கள் உடைந்து முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உரிய கெப் ரக வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது .
மேலும் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago