2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பாரதியாரின் கொள்ளுப்பேரன் மட்டக்களப்புக்கு விஜயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதி நேற்றையதினம் (4) திங்கட்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் ஆச்சிரமத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இல்ல மாணவர்களுடன் அளவளாவிய கலாநிதி இராஜ்குமார் பாரதி பாரதியார் பாடல்களை நினைவுகூர்ந்தார்.

இதேவேளை , கலாநிதி.இராஜ்குமார் பாரதி மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழவகியற் கற்கைகள் நிறுவனத்திற்கும் விஜயம் செய்தார்.

செப்டம்பர் மாதம் 11ஆந்திகதி பாரதியாரின் நினைவு நாளையொட்டியே குறித்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, ஆன்மீக அதிதியாக நீலமாதவனானந்த ஜீ மஹராஜ் முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்  சிறப்பு அதிதியாக இளைப்பாறிய பேராசிரியர் சி. மௌனகுரு ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன்போது சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா,  எம் எஸ் எம் நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன் 


இ​தேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவினால்  கலாநிதி இராஜ்குமார் பாரதி கௌரவம் வழங்கப்பட்டது.  

இதன்போது மகாகவியின்  வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சுவாரஷ்யமான நிகழ்வுகளை  கொள்ளுப்பேரன்  பாடலாகவும் கதையாகவும் கூறி மீட்டினார். இதன்போது  மாவட்ட அரசாங்க அதிபரினால் சிறப்பு  கௌரவம் வழங்கப்பட்டது.

அதிதிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X