Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னயில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை மூடுவதற்கு சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜி அஸீஸுல் ரஹீம் தெரிவித்தார்.
இந்த பஸ் டிப்போவில் இருந்து கண்டி, கட்டுநாயக்க, கொழும்பு உள்ளடங்களாக செவனப்பிட்டி, கட்டுவன்வில, ரிதிதென்ன, வடமுனை ஓமனியாமடு, ஜெயந்தியாய, கடவத்த, மடு மற்றும் புணானை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை சேவையையும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சுமார் 15 வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வரும் இந்த பஸ் டிப்போவை பிழையான தகவல்களின் அடிப்படையில் முழுமையாக மூடுவதற்கு சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் கவனம் செலுத்துமாறும் பிரதேச சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
4 hours ago