Princiya Dixci / 2021 ஜனவரி 21 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020/2021 பெரும்போக நெற்செய்கையில் 35,460 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய அரச நெல் சந்தைப்படுத்தல் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,500 மெற்றிக் தொன் நெல்லை மாத்திரமே அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்து வந்தது. விவசாயிகளினதும் நுகர்வோரினதும் நன்மை கருதியே இம்முறை அதிகளவான நெல்லைக் கொள்வனவு செய்ய இச்சபை தீர்மானித்துள்ளது.
14 தொடக்கம் 22 வீதமான ஈரப்பதனை கொண்ட நெல்லையே அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடனான காலநிலையால் நெல்லை உலர்த்துவதில் விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இச்சிக்கலைத் தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல், பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (20) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் 6 தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, நாளொன்றுக்கு ஏறாவூர் அல் ரபா அரிசி ஆலை 25,000 கிலோகிராம்; ஏறாவூர் மர்லியா அரிசி ஆலை 12,000 கிலோகிராம்; ஓட்டமாவடி மொஹைதீன் அரிசி ஆலை 12,000 கிலோகிராம்; ஏறாவூர் அகிலாஸ் அரிசி ஆலை 25,000 கிலோகிராம் நெல்லையும் காய வைத்துத் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
அதேவேளை, ஜெகதீசன் மற்றும் சிந்தா தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு வாரத்துக்குள் தங்கள் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
5 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
57 minute ago
2 hours ago